What we do

Our Services

சிறுபான்மையினர் உதவி அறக்ட்டளை செய்யக்கூடிய வேலைகள் 
(Read this in English)

1

MEDICAL AID6

மருத்துவ உதவிகள்

2

education aid

கல்விக்கான உதவிகள்

3

old age aid

வயதானவர்களுக்கு உதவிகள்

4

tailoring aid

தொழில் உதவிகள்

CHARITABLE TRUST FOR MINORITIES

சிறுபான்மையினர் உதவி  அறக்கட்டளை முடித்த பணிகள்
(Read this in English)

பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களையே உறுப்பினர்களாக கொண்டு இந்த அறக்கட்டளை 2001 ஆண்டு துவங்கப்பட்டது, பதிவு எண் 882/2001, கடந்த 20 ஆண்டுகளாக சட்டரீதியான பணிகளை தொய்வின்றி செய்துவருகிறது. 1998 கோவை மற்றும் தமிழக சிறைகளில் ஏறத்தாழ 300 கும் மேற்ப்பட்டோர் சிறையினுள் அடைபட்டு கிடந்தனர். அறககட்டளை தொடங்கி பொதுமக்கள் பலரிடம் உதவிகள் பெற்று சட்டபணிகள் மேற்கொண்டதால் பலர் சிறையிலிருந்து  விடுதலை அடைத்தனர், 1998 ல் சிறையில் அடைக்கப்பட்டவர்கள் மீது 35 வழக்குகள் இருந்தன, இந்த 35 வழக்குகளில்தான் 300 க்கும் மேற்ப்பட்டோர் சிறையில் இருந்தனர், தற்போது 22 ஆண்டுகளாக தமிழக சிறையில்  36 பேர் மட்டுமே இருகின்றனர், மீதம் அனைவரும் விடுதலை ஆனார்கள் என்பேதே நிதர்சனம். 

நன்கொடையாக  வழங்கப்படும் பணத்தில் 90 சதவீதம் மட்டுமே வழக்கிற்காக செலவிடப்படுகிறது, நல்ல திறமைவாய்ந்த வழக்கறிஞர்களை நியமனம் செய்து எதிர்கொள்ள CTM ஆவண  செய்கிறது,  மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு நடத்தப்பட்டு  மாவட்ட நீதிமன்றத்தில் தரப்படும் தீர்ப்பு,  அதை  எதிர்த்து உயர்  நீதிமன்றம் சென்று  அவற்றை எதிர்கொண்டு நீதியை பெற முயற்சி எடுக்கப்படும் அங்கும் பாதகமான தீர்ப்பு என்றால் உச்சநீதிமன்றம் சென்று வழக்கு நடத்தப்படும், என உச்சநீதிமன்றம் உயர்நீதிமன்றம் என்று பல வழக்குகளுக்கான உதவிகளை செய்து  வந்திருக்கிறது இவ்அறக்கட்டளை. பலர் மாவட்ட நீதிமன்றத்திலும் சிலர் உயர்நீதிமன்றத்திலும் இன்னும் சிலர் உச்சநீதிமன்றத்திலும் விடுதலை ஆனார்கள் என்பது குறிப்பிடதக்கது.

  • வறுமையை போக்க வீட்டில் தொழில் செய்ய தேவைப்படும்  உபகரணங்களான தையல் மிஷின், கிரைண்டர் வழங்கப்பட்டன 
  • வயதானவர்களுக்கான மருத்தவ உதவி செய்யபடுகின்றன 
  • குழந்தைகளின் கல்வி கட்டணங்கள் செலுத்த பட்டன 
  • மாத உதவித்தொகை ரூபாய் 2000 என 40  குடுபங்களுக்கு வழங்கப்பட்டு வந்துள்ளன.

CTM தொடர்ந்து செய்யவேண்டிய பணிகள்

1998 இல் 300 க்கும் மேற்பட்டோர் தமிழக சிறையில் இருந்தனர், தற்போது 36 பேர் மட்டுமே 22 ஆண்டுகளாக தொடரந்து இருந்து வருகின்றனர். 15 பேருக்கு உச்சநீதிமன்றத்தில் குண்டுவெடிப்பு வழக்கு நிலுவையிலுள்ளது இவ்வழக்கு ஏப்ரல் இறுதியில் இறுதி விசாரணைக்கு வரவுள்ளது, இவ்வழக்கை சட்டரீதியாக எதிர்கொண்டு விடுதலையானால் 36 இல் 15 நபர்களாக  குறைந்து விடுவார்கள் , இதுவரை அனைவரும் வழக்குகள் நடத்தி விடுதலை ஆனார்கள்  என்பேதே நிதர்சனம். தற்போது 15 பேர் உள்ள வழக்கை எதிர்கொள்வதற்கு தேவையான சட்ட பணிகளை அறக்கட்டளை மேற்கொன்று வருகிறது, இது போக ஓரிரு வழக்குகளும் உள்ளன, இவை முடிந்துவிட்டால் அறக்கட்டளை   எடுத்துக்கொண்ட பணிகள் முடிவடைந்துவிடும், அதுபோக உச்சநீதிமன்றம் வரை தண்டனை பெற்றவர்களை அரசாங்கம் மட்டுமே விடுதலை செய்திட முடியும். குறிப்பிட்ட காலத்திற்குள் அரசாங்கம் விடுதலை செய்யாதபட்சத்தில், இதை சட்ட ரீதியாக எதிர்கொள்ள கூடிய வகையில் உச்சநீதிமன்ற தீர்ப்புகள் பல சாதகமாக உள்ளன, இங்கனம் உச்சநீதிமன்றம் வரை சென்று தண்டனை பெற்றவர்கள் கடந்த ஓராண்டில் வழக்கு தொடரந்து வழக்கில் உச்சநீதி மன்றம் வரை சென்று எதிர்கொண்டு உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலம் 5  நபர்கள் விடுதலை ஆனார்கள் என்பதை நினைவில் கொள்க, வழக்கு உச்சநீதிமன்றம் வரை சென்று தண்டைனை பெற்றாலும் வழக்கில் விடுதலை ஆகி  வரக்கூடிய வழிமுறைகள் உண்டு அது சட்டரீதியான போராட்டத்தின் மூலமே சாத்தியமாகும்.

பல குடும்பங்களின் பொருளாதார நிலை, நெருக்கடி நிலையிலேய எப்போதும் உள்ளது, அடுத்தவர்களின் உதவியை எப்போதும் நாடவேண்டி உள்ளது அது அறக்ட்டளை முன் உள்ள மிகப்பெரிய பணியாகும்.
அறக்கட்டளையின் வரவு செலவு கணக்குகள் ஆடிட்டிங் செய்யப்பட்டு முறையாக பேணப்பட்டு வருகிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்