Who we are

CHARITABLE TRUST FOR MINORITIES

சிறுபான்மையினர் சட்ட உதவி மையம் (CTM)

சிறுபான்மையினர் சட்ட உதவி மையம் (CTM)
உருவாக்கிட வேண்டிய அவசியம்? (Read this in English )

‘கோவை’ தென்னிந்தியாவின் மான்செஸ்டர்   என்பதில் கோவை வாழ் மக்கள் அனைவருக்கும் பெருமிதம் உண்டு. தொழில் நகரமான கோவையில் யாருக்கும் வேலை கிடைக்கும், கோவையில் பிழைக்க தெரியாதவன் வேறு எங்கும்  பிழைக்கமாட்டான்  கோவை  என்றாலே தொழில்  நகரம் மட்டும்அல்ல  அருமையான சீதோசன  நிலையும், மேற்குதொடர்ச்சி மலையின் அடிவாரமும், மாலையானால் சில்லென்று  வீசும் குளிர்ந்த காற்றும் யாரையும் வசப்படுத்தும். வாங்க போங்க  என சிறியவர் முதல் பெரியவர் வரை மரியாதையுடன்  நடத்தும் பண்பாடு மிக அற்புதமான  வாழ்விடம்.

திரு. பவானி பா மோகன் (மூத்த வழக்கறிஞர்)

பல்வேறு இன, மொழி , சமயம்  என பரந்துபட்டு வாழும் மக்கள்  எந்த மாச்சரியங்களுக்கும்  இடம் கொடுக்காமல், மாமன், மச்சான் என சகோதர வாஞ்சையுடன் காலம்காலமாக தொன்றுதொட்டு வாழ்ந்து வரும் நாகரீகமிக்க நகரம். அமைதியைக் குலைத்து மக்களை பிளவுபடுத்தி பிரித்தாளும் சூழ்ச்சியை கைவந்த கலையாக கற்றுதேர்ந்தோர்  பேசிய விஷக் கருத்துகளுக்கு கோவை நகர வாசிகள்  சிலர் சிக்கி சூழ்ச்சிகாரர்களின் கைபாவையானார்கள் அதன் பின் கோவை அமைதியை இழந்தது. மான்செஸ்டர் கலவரங்களின் மான்செஸ்டர்ராக காட்சி தந்தது, அனைவரும் கோவையே வேண்டாம் என கோவையை வெறுக்கும் அளவுக்கு எங்கும் ரத்தகறை படிந்த நகரமாக (நரகமாக ) ஆயிற்று, விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலரின் திட்டங்களையும் படுபாதக செயல்களையும் முளையிலேயே கிள்ளி எறியவேண்டியதை, தடுக்கதவறியதன் விளைவாக இரண்டு சமயங்களுக்கிடையே மோதல்கள் உருவாயிற்று.  சிறு சிறு பொறிகளை அரசியல் ஆதாயங்களுக்காக ஊதி ஊதிப் பெரிதாக்கினார்கள். 25 ஆண்டுகளாக சிறு சிறு மோதல்களை  ஆளும் அரசுகள் நினைத்திருந்தால் தொடக்கத்திலேயே கிள்ளி எறிந்து இருக்கலாம். சரியாக கையாளாததால் நீறு பூத்த நெருப்பாக உள்ளங்களில் களன்றுகொண்டிருந்த பகைமை முஸ்லிம் சமுதாயத்தின் மீது நவம்பர் 29 ஆம் தேதி வெளிப்பட்டது, 20 முஸ்லிம் இளைஞர்கள்  கொல்லப்பட்டனர், ஆயிரம் கோடி சொத்துக்கள் சூறையாடப்பட்டன, அரசனும் ஆண்டியான துயர சம்பவம், ஓரே நாளில் கண்கூடாக கண்டனர். அதை தொடரந்து பிப்ரவரி 14  ஆம் தேதி குண்டு வைத்து 58 பேர்கள் கொல்லப்பட்ட கொடிய சம்பவம் நிகழ்ந்தன, கோவை மாநகரமே அல்லோலகல்லோலப்பட்டது. இஸ்லாமியர்கள் வாழும் பகுதிகள் சீல் வைக்கப்பட்டு சிறை வைக்கப்பட்டனர். அமைதியான கோவை நகரம் மயான அமைதியாக மாறியது. குண்டு வெடிப்பை செய்தது யார் என விசாரித்து அறியும்முன் நகரத்தில் உள்ள முஸ்லிம் இளைஞர்களை  வாரி வழித்து கைது செய்து சிறையில் அடைத்தது காவல்துறை.

குற்றம் செய்தவர்களை தண்டிக்கட்டும் தண்டனை பெற்றுதரட்டும் யாரும் வேண்டாம் என கூறிவிடவில்லை.  அப்பாவிகள் மீது வழக்கு தொடரந்து சிறையில் அடைக்கப்பட்டனர் , நவம்பரில் பெரும் பாதிப்பு அதைதொடர்ந்து வந்த நாட்களிலும் முஸ்லிம் சமுதாயம் அடைந்த துயரங்கள் வார்த்தையில் வடிக்க இயலாது, அதைவிடக்கொடுமை சிறையில் அடைபட்டவர்களை  விடுவிக்க குடும்பத்தினர்  இரவு பகலாக அலைந்து நொடிந்து போயினர் .

சட்ட அறிவும், விழிப்புணர்வும் அற்ற முஸ்லிம் மக்கள் பெரும் துயரத்துக்கு ஆளாகி நொந்து நூலாகி நொடிந்து போனவர்களிடம் சில முஸ்லிம் பெயர்தாங்கி வழக்கறிஞர்கள்  கட்டணம் என்ற பெயரில் அடித்த கொள்ளை வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சியது போல் இருந்தது  ஆனால் அதே நேரம் மனிதாபிமானத்துடன் மாற்றுமத வழக்கறிஞர்கள் அணுகிய விதம் மனித நேயத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாக திகழ்ந்தது.

இதையெல்லாம் நேரில் கண்டுணர்ந்த சில நல்ல உள்ளம்கொண்டவர்களின் ஆலோசனையிலும், ஆதரவிலும் அறக்கட்டளை (CTM) உருவாக்கவேண்டியது காலத்தின் கட்டாயமாக இருந்தது, ஆயிரம் குற்றவாளிகள் தப்பித்தாலும் ஒரு நிரபராதி தண்டிக்கபடகூடாது என்ற நீதியின் தாரகமந்திரம்தான் அறக்கட்டளையின் அடிப்படையாகும், குற்றம் செய்தானா  இல்லையா என்பதை நீதி மன்றம் உறுதிபடுத்தும், குற்றவாளி இல்லை என்று நிரூபிப்பதற்கு ஒருவனுக்கு முழு சுதந்திரம் உண்டு, அது அவனுடைய உரிமையும்கூட அவ்அடிப்படையில் அரசியல் சாசனமும் இக்கருத்தை வலியுறுத்துகிறது ,  முஸ்லிம் சமுதாயத்திற்கு அதுவும் 1998 ல் பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கு சட்ட உதவி  தேவைபட்டதால்   அறக்கட்டளை உருவாக்கப்பட்டது  அறக்கட்டளை தொடங்க ஆலோசனை ஆதரவு நல்கியவர்ககளை மறந்திட இயலாது, கீழ்க்கண்ட நபர்களை அறக்கட்டளை நன்றியுனர்வுடன் நினைவு கூறுகிறோம்.

1. பவானி பா மோகன் ( மூத்த வழக்கறிஞர் )
2. எஸ்.யு அன்வர் கான் ( அறக்கட்டளை முன்னாள் தலைவர், தலைமை ஆசிரியர் ஓய்வு )
3. சம்சுநிசா அன்சாரி ( பொதுசெயளாளர் )
5. அபுதாஹிர் ( தலைவர் )
6. அபூபக்கர் ( வழக்கறிஞர், கோவை )

மற்றும் ஆலோசனை வழங்கிய வழக்கறிஞர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், முஸ்லிம் இயக்க சமுதாய தலைவர்கள் அறக்கட்டளைக்கு பணிபுரிந்த மூத்த முன்னோடிகள்.

Our Mission

ctm

what are we doing?